அதிரடி காட்டிய தவான்... சரண்டர் ஆன இலங்கை அணி...

Shikhar Dhawan INDvsSL
By Petchi Avudaiappan Jul 18, 2021 05:46 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் தீபக் சாஹர், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியில் கேப்டன் ஷிகர் தவான் 86 ரன்களும், இஷான் கிஷன் 59 ரன்களும் விளாச 36.4 ஓவர்களில் வெற்றி இலக்கை இந்திய அணி எட்டியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.