சாய் சுதர்சன் ஷ்ரேயாஸ் ஐயர் அபாரம்..! 8விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!
தென்னாப்பிரிக்கா அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
சுருண்ட தென்னாப்பிரிக்கா
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. துவக்கத்தில் இருந்து இந்திய அணி பந்துவீச்சில் திணறிய தென்னாப்பிரிக்கா 27.3 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தென்னாப்பிரிக்காவில் அணியில் அதிகபட்சமாக ஆண்டிலே பெஹ்லுக்வாயோ 33 ரன்களை எடுத்தார். டோனி டி ஜோர்ஜி 28 ரன்களை எடுத்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்தியா வெற்றி
பிறகு எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. அதிகபட்சமாக இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் 55 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அசத்தினார்.
மறுமுனையியல் ஷ்ரேயஸ் ஐயர் 52 ரன்களை குவித்தார்.
தென்னாப்பிரிக்கா அணியில் ஆண்டிலே பெஹ்லுக்வாயோ ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகளை கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னணி வகிக்கிறது. 2-வது போட்டி வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.