217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா: முன்னிலை பெறுமா நியூசிலாந்து?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
நேற்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் கேப்டன் விராட் கோலி 44 ரன்களும், ரகானே 49 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர்.
92.1 ஓவரில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ஜேமிசன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து நியூ சாங் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil