அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு..4 பேர் காயம்.!

usa gunshooting
By Irumporai Jul 18, 2021 09:54 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

அமெரிக்காவின் பேஸ்பால் மைதானத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்ததில் சுமார் 4 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில வருடமாக துப்பாக்கி சூடு சம்பவம் பள்ளிகள், பணியிடங்கள் மற்றும் ஷாப்பிங் மையங்களை குறிவைத்து அடிக்கடி துப்பாக்கிச் சூடு அரேங்கி வருகிறது.

அந்த வகையில்,அமெரிக்க தலைநகரில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் நிறைந்த வாஷிங்டன் நேஷனல்ஸ் மற்றும் சான் டியாகோ பேட்ரெஸ் இடையேயான பேஸ்பால் ஆட்டம் நேற்று நடைபெற்றது.

அப்போது மைதானத்திற்கு வெளியே மர்ம நபர் சுட்டதில் 2 பேர் பலியானார்கள். மற்றொரு துப்பாக்கி சூட்டில் 7 பேர் காயமடைந்தனர்.

இதனால், பரபரப்பானதால் ரசிகர்கள் வெளியேற்றப்பட்டு போட்டி நிறுத்தப்பட்டது. இதற்கிடையில்,சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட விளையாட்டின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களில் அரங்கத்தில் துப்பாக்கிச் சூட்டின் சத்தங்கள் பதிவாகி வெளியாகியுள்ளது.

மேலும்,இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் காயங்களுக்கு சிகிச்சை அளிக்க பகுதி மருத்துவமனைகளுக்குச் சென்றனர்.

இந்த ஆண்டு வாஷிங்டனில் 100 க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்துள்ளன, அவற்றில் பல துப்பாக்கி சூடு சம்பவத்துடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.