தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: தினமும் உயரும் எண்ணிக்கை

covid people tamilnadu daily
By Jon Mar 16, 2021 01:58 PM GMT
Report

சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கி உள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 836 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ள அதேவேளையில், பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 553 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக கூறியுள்ளது.

சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது. இன்று மட்டும் சென்னை பெருநகரில் 317 பேருக்கும், கோயம்புத்தூரில் 70 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக கூறியள்ள தமிழக சுகாதாரத்துறை 22 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.