அதிகரிக்கும் கொரோனா பரவல் .. இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்!
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகஅரசு அறிவித்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாகஅதிகரித்து வருவதால், தற்போது மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படும் அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதனால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது அதன்படி கொரோனா அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசு அறிவித்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலாகிறது.

முக்கிய கட்டுப்பாடுகள்: *உணவகங்கள் டீக்கடைகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இரவு 11 மணி வரை அமர்ந்து சாப்பிட அனுமதி *திருமண நிகழ்வுகளில் 100 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். உள்ளரங்கு நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 200 பேருக்கு அனுமதி *வழிபாட்டு தலங்களில் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
*திருவிழா மற்றும் மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு தடை.
*சென்னை மற்றும் பிற மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
*திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. ஆட்டோ, டாக்சிகள் ஓட்டுனர் மற்றும் இரண்டு பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.