அதிகரிக்கும் கொரோனா மீண்டும் ஊரடங்கா ? - மத்திய அரசு ஆலோசனை

COVID-19
By Irumporai Apr 07, 2023 03:05 AM GMT
Report

தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மத்திய அமைச்சர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

 அதிகரிக்கும் கொரோனா

இந்தியா முழுவதும் தற்போது சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவு கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5000 தாண்டிய நிலையில், அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார்.

அதிகரிக்கும் கொரோனா மீண்டும் ஊரடங்கா ? - மத்திய அரசு ஆலோசனை | Increasing Corona Infection Central Government

இந்த ஆலோசனை கூட்டத்தில், மாநிலங்கள் எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மத்திய அரசு ஆலோசனை 

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொள்கிறார். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி. லட்சத்தீவு மற்றும் அந்தமான் நிக்கோபார் சுகாதார அமைச்சர்ளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.