கோவையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

corona increasing coimbatore
By Irumporai May 29, 2021 02:04 PM GMT
Report

தமிழகத்தில்  இன்று புதிதாக 30,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30,016 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக கோவையில் 3,692 போ பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 2,705 பேருக்கும், ஈரோட்டில் 1,742 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,39,716ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் இன்று மட்டும்  31,759 பேர் கொரோனா தொற்றில் இருந்து கர வீடு திரும்பியுள்ளனா்.

இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 17,06,298-ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 486 பேர் பலியாகியுள்ளதால்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23,261-ஆக அதிகரித்துள்ளது.