அதிகரிக்கும் கொரோனா ...ஒலிம்பிக் போட்டிகள் நடப்பதில் சிக்கல்?
டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் போட்டிகள் நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் மிகுந்த பாதுகாப்போடு தற்போது நடந்து வருகிறது. மேலும் வீரர்கள், பயிற்சியாளர்கள், கமிட்டியினர், வீரர்களின் தனிப்பட்ட பாதுகாவலர்கள் மட்டுமே இந்த முறை ஒலிம்பிக் கிராமத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனாலும் பல்வேறு வீரர், வீராங்கனைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அங்கு தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதுவரை டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148 ஆக உள்ளது. இதனால் போட்டிகள் நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிகள் நடந்தால் கொரோனாதான் பதக்கம் வெல்லும் என மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.