பேராபத்தில் உலகம்..! அண்டார்டிகாவில் உருகும் பனியின் அளவு அதிகரிப்பு - விஞ்ஞானிகள் கவலை
அண்டார்டிகாவில் இதுவரை இல்லாத வகையில் உருகும் பனியின் அளவு அதிகரித்துள்ளதால் கடல்நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
அண்டார்டிகாவில் உருகும் பனியின் அளவு அதிகரிப்பு
உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் என்பது தீவிரமைடைந்துள்ளது. இந்த நிலையில் புவியின் தென் துருவதிலுள்ள அண்டார்டிகா கண்டத்தின் பனிப்படலம் மிக வேகமாக கரைந்து வருகிறது.
இதை தொடர்ந்து கடல்நீர்மட்டம் என்பது உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் தி கார்டியன் பத்திரிகையின் தகவலின் படி, அண்டார்டிகாவின் கடல் பனி அளவு 1.79 மில்லியன் சதுர கிலோமீட்டராக குறைந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
அண்டார்டிகா கண்டத்தில் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி வரை கணக்கிடப்பட்ட ஆய்வின் முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த 6 வருடங்களில் மூன்றாவது முறையாக அண்டார்டிகாவின் கடல் பனி அளவு குறைந்துள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பேராபத்தில் உலகம்
2022 பிப்ரவரி 25 வரையிலான கணகெடுப்பின் படி அண்டார்டிகாவில் கடல் பனி அளவு குறைந்து 1.92 மில்லியன் சதுர கிலோ மீட்டராக இருந்தது. ஆனால் இந்த வருடம் 1.79 மில்லியன் சதுர கிலோமீட்டராக குறைந்துள்ளது.
1979 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செயற்கைகோள் கண்காணிப்புகளின் அடிப்படையில் பார்த்தால் தற்போது அண்டார்டிக் பனிப் படுகையில் பனி உருகுவது இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
பனி உருக்கம் என்பது அதிகரித்துள்ளதால் கடலின் நீர் மட்டம் உயரும் இதனால் நாம் ஆபத்தில் இருப்பதை உணர முடிகிறது.