கிருஷ்ணகிரி அணையில் நீர்வரத்து அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கே.அர்.பி. அணைக்கு வரும் 527 கன அடி நீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரும், மாவட்டத்தில் தொடரும் மழையும் காரணமாக, அணைக்கு வரும் நீர் முழுவதும் ஆற்றில் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஆற்றைக் கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.