சர்க்கரையின் அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறதா? இதோ ஈசியாக குறைக்கும் வழிமுறை..!

Benifits Diabetes fenugreek bloodpressure SugarPatient நீரிழிவுநோய் உடல்ஆரோக்கியம் வெந்தயம் சர்க்கரைநோய் உணவு
By Thahir Mar 27, 2022 12:12 AM GMT
Report
130 Shares

சமையல் அறையில் முக்கியமாக பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் ஒன்று வெந்தயம். மருத்துவ குணங்கள் நிறைந்த வெந்தயம் பல்வேறு நோய்களுக்கு தீர்வாக அமைகிறது.

பல்வேறு நன்மைகளை உள்ளடக்கியுள்ள வெந்தயம், குளிர்காலத்தில் இந்தியாவில் அதிகம் கிடைக்கும் ஒரு முக்கிய பொருளாக உள்ளது.

சர்க்கரையின் அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறதா? இதோ ஈசியாக குறைக்கும் வழிமுறை..! | Increased Sugar Level Medicine Of Fenugreek

கொஞ்சம் கசப்பு தன்மையுடன் இருக்கும் வெந்தயத்தில் ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளேவின், தாமிரம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீஸ், வைட்டமின் ஏ, பி6, சி, கே போன்ற பல ஊட்டச்சத்துக்களின் மூலமாக உள்ளது.

வெந்தையத்தில் பல்வேறு மருத்துவ நன்மைகள் இருப்பதாக அவ்வப்போது நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகள் மூலம் வெந்தயத்தின் மருத்துவ குணங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் வெந்தயம் முக்கிய பங்காற்றுகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிக்கையின்படி,

25-100 கிராம் வெந்தயம் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

உடலில் குளுக்கோஸ் சகிப்புத்தன்மையை மேம்படுத்த உதவும் வெந்தயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது.

மேலும் செரிமானம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

வெந்தயம் சர்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை உறிஞ்சுதல் விகிதத்தை குறைப்பதன் மூலம் இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

குடலில் உள்ள சர்க்கரையை உறிஞ்சுவதை தாமதப்படுத்துவதன் மூலம் உணவுக்குப் பின் இரத்த சர்க்கரை அளவை மாற்றியமைக்கும் நார்ச்சத்து, 4-ஹைட்ராக்ஸிஸ்லூசின் எனப்படும் அமினோஅல்கனோயிக் அமிலத்தைக் கொண்டுள்ளது, மேலும் வெற்தயம் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

இரத்த சர்க்கரையை குறைப்பதைத் தவிர, வெந்தயம் கொழுப்பைக் குறைக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.