முதியோர் உதவி தொகை ரூ.1200 ஆக உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு
முதியோர் மற்றும் கைம்பெண் மாத உதவி தொகை ரூ.1000 இல் இருந்து ரூ.1200 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவி தொகை அறிவிப்பு
இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த அமைச்சரவை கூட்டம் முடிந்து பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், முதியோர் மற்றும் கைம்பெண் மாத உதவி தொகையானது 1000 ரூபாயிலிருந்து 1200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அமைச்சர் அறிவிப்பு
உயர்த்தப்பட்ட இந்த திட்டதிற்கு கூடுதலாக 845.91 லட்சம் அரசுக்கு செலவாகும் என குறிப்பிட்டார். இதன் மூலம் அமைப்பு சாரா, கட்ட தொழிலாளர்கள் என பதிவு செய்த 30 லட்சம் பயனர்கள் பயன்பெறுவார்கள் என அமைச்சர் தெரிவித்தார்.
அடுத்து மாதம் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகை திட்ட செயலாக்கம் குறித்து பேசுகையில், முதற்கட்டம் 21,031 முகாம்கள் அமைக்கப்பட உள்ளது என்றும், மொத்தம் 3 கட்டங்களாக முகாம்கள் நடத்தப்பட்டு டோக்கன், விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன என்றும் , மொத்தமாக 35,925 முகாம்கள் ஆகஸ்ட் இறுதிக்குள் அமைக்கப்பட உள்ளன என்றும், இதுவரை தோராயமாக 50 லட்சம் பேருக்கு டோக்கன் விண்ணப்பம் வழங்கபட்டுள்ளது என்றும் இதற்க்கு தன்னார்வலர்கள் பலர் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார்.