எண்ணெய் கசிவு நிவாரணம் - தமிழக அரசே உயர்த்தி வழங்கிடு..! இபிஎஸ் வலியுறுத்தல்
எண்ணூர் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை உயர்த்தி வழங்கிட எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
எண்ணெய் கசிவு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயலின் போது பெய்த கனமழை காரணமாக எண்ணார் முகத்துவாரப் பகுதியில், சென்னை பெட்ரோ கெமிக்கல் நிறுவன வளாகத்திலிருந்து வெள்ள நீரோடு எண்ணெய் கசிந்தது.
இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்களின் வாழக்கை பெரும் பாதிப்புகளை சந்தித்தது. குறிப்பாக பல மீனவ குடும்பங்கள் பெரும் இன்னலை சந்தித்தது. இதன் காரணமாக தமிழக அரசு அவர்களுக்கு நிவாரண அறிவித்திருந்தது.
எடப்பாடி வலியுறுத்தல்
கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 8 கோடியே 68 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த தொகையை உயர்த்தி வழங்கிடவேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மீனவர்களின் படகிற்கு நிவாரணமாக ரூ.50,000, கண்ணாடி இழை படகிற்கு ரூ.30,000 வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மீன்பிடி வலைக்கு ரூ.25,000, கட்டுமரத்திற்கு ரூ.20,000 நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.