ரூ.600 .. காதலர் தினத்தில் காதலர்களை சோகமாக்கிய ரோஜாக்கள்
உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக காதலர்கள் தங்கள் அன்பினை வெளிபடுத்த பொருட்களை விட ரோஜா பூவினை கொடுத்து தங்களின் காதலை கூறுவார்கள்.
ரோஜாவும் காதலர் தினமும்
இந்த நிலையில் காதலர் தினத்தால் தற்போது ரோஜாக்களின் விலை அதிகரித்துள்ளது.குறிப்பாக, ஓசூர், பெங்களூரு போன்ற பகுதிகளில் இருந்து தாஜ்மஹால் ரோஜா, பட்டர் ரோஜா, சிவப்பு, மஞ்சள், வெள்ளை என பல வண்ணங்கள் ரோஜாப்பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
விலை உயர்வு
தேவை அதிகரித்த போதும் பனிப்பொழிவு காரணமாக ரோஜாப்பூ வரத்து குறைந்துள்ளது.
தோவாளை சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 500 கட்டு ரோஜாப்பூ வந்த நிலையில் இன்று 200 கட்டுகள் மட்டுமே வந்ததாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக ரோஜா பூக்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது