ரயில் நிலையங்களின் நடைமேடைக் கட்டணம் உயர்வு

Chennai Indian Railways
By Irumporai Sep 30, 2022 03:20 AM GMT
Report

சென்னை சென்ட்ரல் உட்பட 8 ரயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணம் உயர்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட 8 ரயில் நிலையங்களில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 2023ம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை நடைமேடை கட்டணம் பத்து ரூபாயிலிருந்து 20 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நடை மேடை கட்டணம் உயர்வு

தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் தொடர்ச்சியாக வருகை தரவுள்ளன.

இந்த பண்டிகைக் காலங்களில் ரயில் நிலைய நடைமேடைகளில் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் நடைமேடைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ரயில் நிலையங்களின் நடைமேடைக் கட்டணம் உயர்வு | Increase In Platform Charges Of Railway Stations

அக்டோபர் 1 முதல் அமல்

அதன்படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலங்களை முன்னிட்டு நடைமேடைக் கட்டண உயர்வு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் வரும் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.