சபரிமலை பக்தர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு - என்ன தெரியுமா?
சபரிமலையில் ஏற்கெனவே பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் தினசரி அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கபட்டுள்ளது.
கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15 ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 16 ஆம் தேதி முதல் "வெர்ச்சுவல் க்யூ" முலம் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்கள் தினசரி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இதனிடையே பக்தர்கள் கூட்டம் அலை மோதியதால் "வெர்ச்சுவல் க்யூ" மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்திலிருந்து 45 ஆயிரமாக நேற்ற அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் கேரளத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் சபரிமலையில் இனி தினசரி 60000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ஐயப்பனுக்கு பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் வரை நெய் அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சந்நிதானத்தில் தயாராக உள்ள பக்தர்களுக்கு 500 அறைகளை திறக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.வழக்கம்போல் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் உள்ளிட்ட கோவிட்-19 நெறிமுறைகளை பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு அறையிலும் தூய்மைப்படுத்தல் பணிகளை திருவாங்கூர் தேவசம் போர்டு கவனிக்க வேண்டும் என அறிவுறித்தப்பட்டுள்ளது.