சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று..!

COVID-19 China
By Thahir Jul 15, 2022 02:37 PM GMT
Report

சீனாவில் புதன் கிழமை 292 ஆக இருந்த கொரோனா எண்ணிக்கை, நேற்று வியாழக்கிழமை அன்று 432ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா 

சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே கடந்த 2 வருடமாக ஆட்டம் காண வைத்துவிட்டது.

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று..! | Increase Covid Case China

தற்போது தான் அந்த கொரோனாவை அனைவரும் மறந்து வரும் நிலையில், தற்போது சற்று கொஞ்சம் அந்த கொரோனா எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

ஏற்கனவே நமது நாட்டில் முக்கிய நகரங்களில் கட்டாய முகக்கவசம் போன்ற கட்டுப்பாடுகள் எட்டிப்பார்க்கின்றன, தற்போது சீனாவில் வந்த தகவல் கொஞ்சம் பயமுறுத்தியது என்றே கூறலாம்.

அதாவது, புதன் கிழமை 292 ஆக இருந்த கொரோனா என்னைகை, நேற்று வியாழக்கிழமை அன்று 432ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 2 மாதங்களை ஒப்பிடுகையில் ஒரு நாள் எண்ணிக்கையில் அதிகமாம்.

மே 25 என்னைகையை விட தினசரி எண்ணிக்கை நேற்று அதிகரித்துள்ளதாம். அதனால் சற்று எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்த பட்டு வருகின்றனர் சீன மக்கள்.