அமைச்சர் செந்தில்பாலாஜி இடங்களில் ஐடி ரெய்டு : வருமானவரித் துறை அதிகாரிகள் வந்த கார் மீது தாக்குதல்

V. Senthil Balaji
By Irumporai May 26, 2023 04:22 AM GMT
Report

 அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்ய வந்த போது அதிகாரிகள் வந்த காரை அவரது ஆதரவாளர்கள் தாக்கி உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருமானவரித்துறை சோதனை

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. கரூரில் உள்ள அவரது வீடு, சென்னையில் அவர் தங்கியுள்ள அரசு பங்களா உள்ளிட்ட இடங்களிலும் இந்த சோதனை நடத்தி வருகின்றது.

அமைச்சர் செந்தில்பாலாஜி இடங்களில் ஐடி ரெய்டு : வருமானவரித் துறை அதிகாரிகள் வந்த கார் மீது தாக்குதல் | Income Tax Rounded And Their Car Was Attacked

அதிகாரிகள் கார் மீது தாக்குதல்

இந்த நிலையில் ஐடி ரெய்டில் ஈடுபட்ட பெண் அதிகாரியை பணி செய்ய விடாமல் திமுக ஆதரவாளர்கள் சிலர் தடுத்தனர், மேலும் கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் அதிகாரிகள் சோதனையிட சென்ற போது பெண் அதிகாரியிடம் கரூர் மாநகராட்சி கவிதா கணேசன் உள்ளிட்டவர்கள் வாக்குவாதம் செய்தனர்.

மேலும் அதிகாரிகள் சோத்னை செய்ய வந்த காரும் தாக்கப்பட்டதும் தற்போது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வீடியோ

[