அண்ணாமலை புகார் எதிரொலி - ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் ஐடி ரெய்டு!
ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகிறது.
வருமான வரித்துறை ரெய்டு
ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் அண்ணா நகர், ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், சேத்துபட்டு என 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களிலும் ஜிஸ்கொயர் நிறுவனங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அண்ணாநகர் திமுக எம்எல்ஏ மோகன் மற்றும் அவருடைய மகன் கார்த்திக் ஆகியோரது வீடுகளிலும் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஜி ஸ்கொயர்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜி ஸ்கொயர் மீது சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே வியாபாரம் செய்து வருகிறோம் என்றும் தங்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானவை என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.