ஆளுங்கட்சியை சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் ஐடி ரெய்டு : அதிர்ச்சியில் திமுக
திமுகவைச் சேர்ந்த தொழிலதிபர் ஏவி சாரதி என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் வசிக்கும் திமுகவைச் சேர்ந்த தொழிலதிபர் ஏ.வி. சாரதி என்பவர் கல்குவாரி நடத்தி வருகின்றார். அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏ.வி.சாரதியின் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.முன்னதாக,அதிமுகவில் வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளராக இருந்தார் தற்போது 4 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில், அவருடைய வீடு, அலுவலகங்கள், கல்குவாரி பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆளுங்கட்சியை சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் சோதனை நடைபெறுவதால் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வரி ஏய்வு காரணமாகவே இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.