கரூரில் மீண்டும் வருமான வரித்துறையினர் ரெய்டு - துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு
கரூரில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்த இடங்களில் மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையை தொடங்கி உள்ளனர்.
கரூரில் கடந்த மே மாதம் 26ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களான அவரது தம்பி அசோக்குமார், கொங்கு மெஸ் உணவக உரிமையாளர் மணி (எ) சுப்பிரமணி உட்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து 8 நாட்கள் வருமான வரி துறை சோதனை நடைபெற்றது.இதில் சுமார் ஐந்து இடங்களில் சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோதை நகர் பகுதியில் அமைந்துள்ள அன்னை அபார்ட்மெண்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ள சக்தி மெஸ் உணவாக உரிமையாளர் கார்த்தி மற்றும் அதிபன் ரமேஷ் ஆகிய இருவரது வீடுகளில் சோதனை தொடங்கியுள்ளது.
ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட இடங்களான இங்கு ஐந்து வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையை தொடங்கியுள்ளனர்.