வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்: செலுத்தவில்லையென்றால் நாளை முதல் ரூ.10 ஆயிரம் அபராதம்!

people Economy businessman
By Jon Feb 16, 2021 12:44 AM GMT
Report

ஒவ்வொரு வருடமும் வருமான வரி கணக்கை அந்த ஆண்டின் ஜூலை மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரித்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதலில் நவம்பர் வரை நீடிக்கப்பட்டிருந்த அவகாசம் அதன் பின்னர் டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வருமானத் துறை அலுவலகம் பிப்ரவரி 15ம் தேதிக்குள் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவித்திருந்தது.

அந்த வகையில் இன்றுடன் வருமான வரி தாக்கல் செய்யும் நாள் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், அபராதம் இன்றி இன்றுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம். இன்றுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் நாளை முதல் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தி தான் கணக்கை தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.  

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்: செலுத்தவில்லையென்றால் நாளை முதல் ரூ.10 ஆயிரம் அபராதம்! | Income Tax Last Day

மேலும் வரும் மார்ச் 31ம் தேதிக்கு பின்னர் கணக்குகளை தாக்கல் செய்ய முடியாது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். எனவே வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் உடனடியாக இன்றைக்குள் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.