நடிகர் சோனு சூட் வீட்டில் திடீரென வருமான வரித்துறை ஆய்வு

incometaxdepartment actorsonusood
By Irumporai Sep 15, 2021 01:27 PM GMT
Report

நடிகர் சோனு சூட்க்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீரென ஆய்வு மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகராக இருந்து வருபவர் சோனு சூட்.தமிழில் ஒஸ்தி, தேவி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்

கொரோனா ஊரடங்கு சமயத்தில்  சமூக வலைதளங்கள் வழியாக பலருக்கும் பல உதவிகளைச் செய்து, ரியல் ஹீரோவாக திகழ்ந்து வலம் வருகிறார் நடிகர் சோனு சூட்.

மேலும் டெல்லி மாநில அரசின் புதிதாக கல்வி தொடர்பாக துவங்கியுள்ள திட்டத்திற்கு சோனு சூட்டை விளம்பரத் தூதராக நியமித்தது. இந்நிலையில் மும்பையில் தனக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீரென ஆய்வு நடத்தி வருகின்றனர். திடீரென வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொள்ளும் இந்தச் சம்பவம் அனைவரின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.