கோவையில் லாட்டரி அதிபர் மார்டினின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!
கோவையில் துடியலூரில் உள்ள லாட்டரி அதிபர் மார்டின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
லாட்டரி அதிபர்
கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த வெள்ளக்கினர் பகுதியில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டிற்கு அதிகாலை 6 மணிக்கு கேரளாவிலிருந்து 2 கார்களில் 11 வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர்.
பின்னர் வீட்டிற்குள் சென்ற அதிகாரிகள் , யாரும் உள்ளே வராதபடி நுழை வாயிலையும், வீட்டின் கதவுகளையும் மூடினார். வீட்டிலிருந்தவர்களின் செல்போன்களையும் வாங்கினர்
ஐ.டி ரெய்டு
பின்னர் மார்ட்டின் வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையையும் அலசி ஆராய்ந்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அருகே உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். வருமான வரித்துறை சோதனையை முன்னிட்டு அவரது வீடு மற்றும் அலுவலகங்கள் முன் துப்பாக்கிய ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.