சென்னையில் 20 இடங்களில் அதிரடி ஐடி ரெய்டு - சிக்கப்போகும் பிரபலங்கள்
சென்னையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
ஐடி ரெய்டு
வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து சென்னையில் உள்ள 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அண்ணா நகரில் அசோக் ரெசிடென்சி உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வருமானத்தை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதேபோல் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.
பரபரப்பு
சில ஹாஸ்பிடாலிட்டி குழுமங்கள், ஓட்டல்கள் நடத்தும் குழும நிறுவனத்திலும் ரெய்டு நடந்து வருகிறது. வீடு, அலுவலகங்களில் இருந்து யாரையும் வெளியே செல்லவும், புதிதாக யாரும் உள்ளே வரவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.