அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக தொடரும் ரெய்டு
சினிமா பைனான்சியர் அன்பு செழியன் வீடுகளில் கடந்த இரண்டு நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஐடி ரெய்டு
இது தொடர்பாக 13 ரூபாய் கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரி புகார் ஏய்ப்பு தொடர்பாக சில நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அன்புசெழியன் வீடு, தியாகராய நகரில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக சோதனை நடத்தினர் .
மேலும் மதுரை மேலமாசி வீதியில் உள்ள அன்புசெழியனுக்கு சொந்தமான அலுவலகம், கீரைத்துறை பகுதியில் உள்ள வீடு, செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் திரையரங்கம் என மதுரையில் மட்டும் அன்பு செழியன்தொடர்புடைய 30 இடங்களில் வருமானவரித்துறை என சோதனை நடத்தினர்.
மூன்றாவது நாளாக தொடரும் சோதனை
இந்நிலையில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லம் மற்றும் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரொக்கம் கைப்பற்றப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் நுங்கம்பாக்கம், காம்தார் நகரில் உள்ள சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் சகோதரர் அழகர்சாமியின் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்தி வந்த சோதனை நிறைவு பெற்றுள்ளது. அங்கிருந்து பணம்,தங்க நகைகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

Brain Teaser Maths: '10+5=இற்கு விடை 35' எனில் வினாக்குறி இருக்குமிடத்தில் என்ன விடை வரும்? Manithan
