வீட்டில் பிரச்சனை தீர.. 5 வயது குழந்தை பலி கொடுக்கப்பட்ட சம்பவம் - பகீர் பின்னணி!
வீட்டில் பிரச்சனை தீர வேண்டுமென்று 5 வயது பெண் குழந்தை பலி கொடுக்கப்பட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 வயது குழந்தை
கோவா மாநிலத்தில் உஸ்காவோவில் உள்ள கசயாலே பகுதியைச் சேர்ந்த 5 வயது பெண் குழந்தை ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன் காணாமல் போய் உள்ளது. இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் குழந்தை வீட்டிற்குள் சென்ற குழந்தை மீண்டும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் வீட்டின் உரிமையாளர் பாபாசாஹேப் அலாத் (52) மற்றும் அவரது மனைவி பூஜாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் பல் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பாபாசாஹேப் அலாத் (52) மற்றும் அவரது மனைவி பூஜாவிற்கு திருமணமாகி 25 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மந்திரவாதி ஒருவரைச் சந்தித்துள்ளனர்.
நரபலி
அப்போது 5 வயது பெண் குழந்தை ஒன்றைப் நரபலி கொடுத்தால் மனைவிக்குக் குழந்தை பிறக்கும் என்று கூறியுள்ளார். இதனை நம்பி தம்பதியினர் இருவரும் சேர்ந்து 5 வயது சிறுமியைக் கொன்று பலி கொடுத்துவிட்டு வீட்டின் பின்புறத்தில் புதைத்தது தெரியவந்தது.
இதையடுத்து, சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர் . தொடர்ந்து இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.