பிறப்புறுப்பில் 29 தையல்.. 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - இளைஞர் வெறிச்செயல்!
5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
5 வயது சிறுமி
மத்தியப் பிரதேச மாநிலத்தில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சிவபுரி பகுதியில் 5 வயது சிறுமி கடந்த 23ஆம் தேதி வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போகி உள்ளார்.
இது குறித்து காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பக்கத்து வீட்டின் மொட்டை மாடியில் ரத்த வெள்ளத்தில் மயக்க நிலையில் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்குச் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் கொடூரமாகத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் சிறுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் சிறுமியின் பக்கத்து வீட்டில் உள்ள 17 வயது சிறுவனை காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது குடிபோதை சிறுவன் கொடூரமாகத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டார்.
கொடூரம்
பாதிக்கப்பட்ட சிறுமியின் பிறப்புறுப்பு பகுதிகளில் பல வெட்டுகள், கீறல்கள் மற்றும் கடித்த அடையாளங்கள் இருந்ததால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து உயிருக்குப் ஆபத்தான நிலையில் உள்ளார்.
சிறுமியின் பிறப்புறுப்பில் 29 தையல்களும்,அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈட்டுப்பட்டு வருகின்றனர்.