மாணவியை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்த மாணவர்கள் - வகுப்பறையில் நடந்த கொடூரம்!
பள்ளி மாணவியை நிர்வாணமாக்கி சக மாணவர்கள் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா
கேரளாவில் உள்ள பாலா என்ற பகுதியில் ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள்-மாணவிகள் சேர்ந்து படித்து வருகின்றனர்.அந்த பள்ளியில் பாலா பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுள்ளார்.அப்போது பள்ளி மாணவி ஓய்வு நேரத்தில் அந்த மாணவி வகுப்பறையில் அமர்ந்திருந்தாக கூறப்படுகிறது.
அதே பள்ளியில் படித்து வரும் 7 மாணவர்கள் மாணவியின் ஆடைகளைக் கழற்றி நிர்வாணமாக்கி செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.இந்த சம்பவத்தால் பயந்துபோன மாணவி பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் கூறாமல் இருந்துள்ளார்.
பள்ளி மாணவி
இதனையடுத்து மீண்டும் பள்ளி மாணவியை நிர்வாணமாக்கி வீடியோ எடுக்க முயன்ற போது அவர்களிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார்.இதனை கண்ட ஆசிரியர்கள் மாணவியைப் பிடித்து விசாரித்தனர்.அப்போது வகுப்பறையில் வைத்து மாணவர்கள் தன்னை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டதாகவும்,
தற்போது மீண்டும் நிர்வாண வீடியோ எடுக்க முயன்றதாக அதிர்ச்சி தகவலைக் கூறினார்.இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.