திமுக ஆட்சியில் மண்ணும், மக்களும் செழித்துள்ளனர் - மு.க.ஸ்டாலின் பேச்சு !
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர்தான் மண்ணும் செழித்துள்ளது, மக்களும் செழித்துள்ளனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
கண்காட்சி மற்றும் கருத்தரங்கு தொடக்கம்
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் . அதனைத் தொடர்ந்து அவர் மேடையில் சிறப்புரையாற்றினார்.
மண்ணும் செழித்துள்ளது, மக்களும் செழித்துள்ளனர்
அப்போது பேசிய அவர் "வேளாண்துறை வளர்ச்சி மக்களின் வாழ்வோடும், உயிரோடும் தொடர்புடையது. ஒருநாட்டின் செழிப்பின் அளவுகோல் வேளாண் துறை. திமுக ஆட்சியில் வேளாண்மை துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து தனி பட்ஜெட் போடப்படுகிறது. ரூ.61 கோடி செலவில் குறுவை சாகுபடி திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். உழவர்கள் உற்பத்தியாளர்களாக மட்டும் காலம் முழுதும் இருந்துவிடாமல் அவர்களே விற்பனையாளர்களாக மாறவேண்டும் என்ற உன்னதமான நோக்கத்துடன் உழவர் சந்தைகளை தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தொடங்கி வைத்தார் .
ஆனால் அதற்கடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் அதனை முறையாக செய்யவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 100 உழவர் சந்தைகளை புத்துயிர் பெற வைத்திருக்கிறது, புதிதாக 10 உழவர் சந்தைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. என்றும் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மண்ணும் செழித்துள்ளது, மக்களும் செழித்துள்ளனர் என்று அவர் பேசினார்.