முதல்வர் விஜய்யின் குட்டி கதை... இன்பன் உதயநிதி வைத்த இன்ஸ்டா ஸ்டோரி

Udhayanidhi Stalin Chief Minister of Tamil Nadu Joseph Stalin
By Manchu Jun 24, 2026 09:34 AM GMT
Report

சட்டசபையில் நேற்று முதல்வர் கூறிய குட்டி கதை பல சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் உதயநிதியின் மகன் தனது இன்ஸ்டாவில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

சட்டசபையில் குட்டி கதை

சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் முதல்வர் விஜய் பேசியுள்ளார்.

எதிர்கட்சி தலைவர் உதயநிதி சட்டசபையில் தவெக அரசை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளதற்கு நேற்று முதல்வர் விஜய் கொடுத்துள்ள பதில் தெறிக்கவிட்டுள்ளது.

திமுக-வின் ஊழல் குறித்து முதல்வர் பேச்சை எடுத்ததும், திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்துள்ளனர்.

முதல்வர் விஜய்யின் குட்டி கதை... இன்பன் உதயநிதி வைத்த இன்ஸ்டா ஸ்டோரி | Inbanidhi Reply Cm Vijay Story Controversy

திருச்செந்தூர் தரிசன டிக்கெட் விலை உயர்த்தப்படவில்லை- அமைச்சர் ரமேஷ் விளக்கம்

திருச்செந்தூர் தரிசன டிக்கெட் விலை உயர்த்தப்படவில்லை- அமைச்சர் ரமேஷ் விளக்கம்

அப்பொழுது முதல்வர் விஜய் உங்க அப்பாவை காணவில்லை என்ற கருத்தில் குட்டி கதையை தனது பாணியில் கூறினார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக உதயநிதி சட்டசபை வாசல் முன்பு செய்தியாளர்களை சந்தித்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கணவரை தேடும் மனைவி கதை தமிழ்நாட்டுக்கே தெரியும் என்று கூறினார்.

இந்நிலையில் உதயநிதியின் மகன் இன்பா தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில் நேற்று தனது தந்தை முதல்வருக்கு கொடுத்த பதிலை புகைப்படமாக வைத்து, பின்னே கல்யாணம்தான் கட்டிக்கிட்டு செட்டப்பையும் வைச்சிக்கிட்டு என்று பாடலை ஒலிக்க வைத்துள்ளார். இது தற்போது பேச்சு பொருளாக மாறியுள்ளது.

முதல்வர் விஜய்யின் குட்டி கதை... இன்பன் உதயநிதி வைத்த இன்ஸ்டா ஸ்டோரி | Inbanidhi Reply Cm Vijay Story Controversy