போலி பாஸ்போர்ட்.. இந்தியா வருபவர்களுக்கு இதுதான் தண்டனை -புதிய குடியேற்ற மசோதா சொல்வது என்ன?
இந்தியாவில் கடுமையான விதிமுறைகளுடன் புதிய குடியேற்ற மசோதா நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
புதிய குடியேற்ற மசோதா
2025 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தொடங்கி ஏப்ரல் 4 வரை இடைவேளையுடன் நடைபெற்று வருகிறது. இதில் நிதி மசோதா,விமானப் பொருட்களில் நலன் பாதுகாப்பு மசோதா , புதிய குடியேற்ற மற்றும் வெளிநாட்டினர் மசோதா உட்பட 16 மசோதாக்கள் திருத்த சட்டம் கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மசோதாவின் வரையறைகள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், சட்டவிரோத குடியேற்றத்திற்கு மத்திய அரசு விதிமுறைகளைக் கடுமையாக உள்ளது. அதன்படி, புதிய குடியேற்ற மசோதாவில், இந்தியாவிற்குள் வெளிநாட்டினர் அனுமதியின்றி நுழைந்தால் ரூ.5 லட்சமும், போலி பாஸ்போர்ட்டுக்கு ரூ.10 லட்சமும் அபராதம் விதிக்கப்படும்.
வெளிநாட்டினர் சட்டம், 1946; குடியேற்ற (கேரியர்கள் பொறுப்பு) சட்டம், 2000; வெளிநாட்டினர் சட்டம், 1946 மற்றும் பாஸ்போர்ட் (இந்தியாவிற்குள் நுழைதல்) சட்டம், 1920 ஆகிய நான்கு சட்டங்களை ரத்து செய்து புதிய மற்றும் விரிவான சட்டத்தை உருவாக்கி உள்ளது.
இந்த மசோதா, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
புதிய மசோதாவின் முக்கிய அம்சங்கள்:
இந்தியாவிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைவரும் செல்லுபடியாகும் பயண ஆவணங்களைக் கொண்டிருக்க வேண்டும். குடியேற்ற அதிகாரிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் நிர்ணயிக்கப்படும்.
வெளிநாட்டினர்கள் இந்தியாவில் தங்கும் முறையைக் கண்காணிக்கப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.இந்தியாவில் வெளிநாட்டினர் சேர்க்கும் பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களின் குறித்து விவரமாகக் குறிப்பிடப்படும்.
இந்தியாவில் வெளிநாட்டினரின் இயக்கங்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் அனுமதிக்கப்படுவர். தடைசெய்யப்பட்ட வெளிநாட்டவர்கள், அடிக்கடி வரும் இடங்களைக் கட்டுப்படுத்தப்படும். விதிகளை மீறுபவர்கள் மீது தண்டனை விதிக்கப்படும் என்று இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.