இயற்கை எழில் கொஞ்சும் உதகை பல்வேறு சிறப்புகளை பெற்றிருக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

M K Stalin
By Thahir May 21, 2022 07:56 AM GMT
Report

உதகை நகரின் 200வது ஆண்டு விழாவை அடுத்து ரூ.119 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"இயற்கை எழில் கொஞ்சும் உதகை பல்வேறு சிறப்புகளை கொண்டது.

இயற்கை எழில் கொஞ்சும் உதகை பல்வேறு சிறப்புகளை பெற்றிருக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! | In Nature The Little Help Has Various Specialties

பழங்குடியின மக்களின் வரவேற்பு என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது. தெப்பக்காடு யானைகள் முகாமில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும்.

சுற்றுலா சார்ந்த தொழிலாளர்களை கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்கப்படும். வனப்பரப்பை 20 விழுக்காட்டில் இருந்து 30 விழுக்காடாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அந்நிய களை தாவரங்களை அகற்றும் பணிக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வன விலங்குகளை பாதுகாக்க புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் மக்களின் பிரச்சினைகளுக்காக நாடாளுமன்றத்தில் ஆ.ராசா குரல் கொடுக்கிறார்.

நீலகிரி மாவட்டத்திற்கே ராஜாவாக மக்களின் தேவைகளை அறிந்து ஆ.ராசா செயல்படுகிறார். நீலகிரி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை திமுக அரசு கொடுத்துள்ளது" என்று அவர் கூறினார்.