இந்தியாவில் வறுமை முற்றிலும் ஒழியும்: நாராயண மூர்த்தி நம்பிக்கை

Infosys Narayana Murthy Poverty of India
By Petchi Avudaiappan Jul 17, 2021 04:01 PM GMT
Report

இந்தியாவில் அடுத்து 50 ஆண்டுகளில் வறுமை, ஊட்டச்சத்து பற்றாக்குறை மாதிரியானவை முற்றிலும் அடியோடு ஒழியும் என இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி கூறியுள்ளார். 

கவுகாத்தி ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவர், பல சவால்களுக்கு இடையில் பொறுப்புடன் இந்த இலக்கை அடைய முயற்சிகளை முன்னெடுத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் அடுத்து வரும் 50 ஆண்டுகளில் இந்தியா நிச்சயம் வளர்ச்சி அடைந்த ஒரு நாடாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

அந்த வளர்ச்சி பெற்ற இந்தியாவில் வறுமை, நோய் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை மாதிரியானவை இருக்காது. இது சாத்தியமடைய வேண்டுமானால் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் மாதிரியானவற்றில் இந்தியா முன்னோடியாக திகழ வேண்டும். அதோடு திறமையான நிர்வாக ஆளுமையும் அவசியம் என நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.