இது மலர்கிரீடம் அல்ல முள்கிரீடம் - பழைய வரலாறு திரும்பும்..!! பிரேமலதா விஜயகாந்த்

Vijayakanth Vijayakanth DMDK
By Karthick Dec 15, 2023 01:50 AM GMT
Report

நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா தேர்ந்தெடுக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுச்செயலாளராக பிரேமலதா

தேமுதிகவின் பொதுச்செயலாளராக நேற்று பொருளாளராக இருந்த பிரேமலதா விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். விஜயகாந்த்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற பிறகு பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டு பிரேமலதா தொண்டர்களிடத்தில் உரையாற்றினார்.

in-2026-dmdk-will-form-government-premalatha

முதுகுக்கு பின்னால் சிலர் தன்னை பற்றி இல்லாததும் பொல்லாததும் பேசுவதை தெரிந்தும் தாம் பொறுமையாக எதுவும் தெரியாதது போலவே இருப்பதாக கூறிய பிரேமலதா, கட்சியை கரை சேர்க்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கமே தவிர வேறு இல்லை எனத் தெரிவித்தார்.

ஆட்சி உறுதி

தொடர்ந்து பேசிய அவர், தன்னை பொறுத்தவரை பொதுச்செயலாளர் பதவியை என்பது முள் கிரீடமாகவே பார்ப்பதாக குறிப்பிட்டு, தனக்கு பொறுப்புகள் கூடியிருப்பதால் டென்ஷனாக இருப்பதாகவும் கூறினார்.

in-2026-dmdk-will-form-government-premalatha

மேலும், தன்னுடன் கட்சிக்காக சேர்ந்து உழைக்க தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் எனகேட்டுக்கொண்டு தேமுதிகவினர் உண்மையாக, ஒற்றுமையாக கட்சிக்கு உழைக்க முன் வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்து தேமுதிகவை ஆட்சியில் அமர வைக்கும் நாள் தான் விஜயகாந்தின் லட்சியம் நிறைவேறிய நாளாக அமையும் என்றார்.

எப்படி அனுமதிக்க முடியும்..?பள்ளி குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து..? அண்ணாமலை அறிக்கை..!

எப்படி அனுமதிக்க முடியும்..?பள்ளி குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து..? அண்ணாமலை அறிக்கை..!

கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 29 தேமுதிக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்கு சென்றார்கள் என்பதை சுட்டிக்காட்டிய பிரேமலதா, அந்த வரலாறு மீண்டும் திரும்பும் என்றும் இதுவரை தேமுதிக ஒரு எம்.பி. கணக்கை கூட தொடங்கவில்லை என்றும் வரும் 2024-ல் நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக எம்.பி.க்கள் டெல்லிக்கு செல்வது உறுதி என தொண்டர்களிடத்தில் சூளுரைத்தார்.

in-2026-dmdk-will-form-government-premalatha

மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்று மீண்டும் சட்ட சபைக்கு செல்வார்கள் என்ற அவர், 2026-ல் தேமுதிக ஆட்சி அமைப்பது உறுதி என்றும் தொண்டர்களிடத்தில் ஆவேசமாக பேசினார்.