இன்னும் 48 மணி நேரம் டைம்.. ஆப்கானிஸ்தான் தூதரின் மகளை கடத்தியவர்களை கைது செய்ய இம்ரான் கான் உத்தரவு !
ஆப்கானிஸ்தான் தூதரின் மகளை கடத்தியவர்களை 48 மணி நேரத்தில் கைது செய்ய பாகிஸ்தான் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் தூதர் நஜிபுல்லா அலிகிலின் மகள் சில்சிலா அலிகில் நேற்று முன்தினம் மதியம் 1.30 மணியளவில் ஜின்னா சந்தை அருகே சில்சிலா அலிகில் கடத்தப்பட்டு இரவு 7 மணியளவில் காயமடைந்த நிலையில் விடுவிக்கப்பட்டார் .
இந்த சம்பவம் உலக அரசியலில் பேசு பொருளானது. இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் ஆப்கான் தூதரின் மகள் கடத்தலில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்ய அனைத்து விதமான படைகளையும் பயன்படுத்துமாறு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த கடத்தல் சம்பவத்திற்கு காரணமான உ குற்றவாளிகளை 48 மணி நேரத்திற்குள் கைது செய்ய வேண்டும் என்று பிரதமர் உள்துறை அமைச்சருக்கு மேலும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரித்து சம்பவத்தில் தொடர்புடைய
நபர்களை கைது செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக
தகவல்கள் தெரிவிகின்றன.