இந்திய அணியின் படுதோல்விக்கு இதுதான் காரணம் - வெளுத்தெடுத்த இம்ரான் தாஹிர்

viratkohli KLRahul INDvSA SAvIND imrantahir
By Petchi Avudaiappan Jan 22, 2022 04:36 PM GMT
Report

தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி மோசமாக இழந்துள்ளது குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் கருத்து தெரிவித்துள்ளார். 

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் போட்டியிலும் 31 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது போட்டியிலும் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி அசத்தியது.

இந்திய அணியின் படுதோல்விக்கு இதுதான் காரணம் -  வெளுத்தெடுத்த இம்ரான் தாஹிர் | Imran Tahir Comment After India Lose

இந்திய அணியின் இந்த தோல்வி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது. முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் இந்திய அணியின் தோல்வி குறித்தான தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான இம்ரான் தாஹிரும், இந்திய அணியின் தோல்வி குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் நான் எந்த அணி சிறந்தது என்று கூற விரும்பவில்லை, ஆனால் இந்திய அணி மிகப்பெரும் பலம் கொண்ட அணி, தென்னாப்பிரிக்கா அணியோ இளம் வீரர்கள் பலரை உள்ளடக்கிய அணியாகவே உள்ளது. சீனியர் வீரர்கள் பலர் தற்போதைய தென்னாப்பிரிக்கா அணி இல்லாததால் இந்திய வீரர்கள் தென்னாப்பிரிக்கா அணியை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள். தென் ஆப்ரிக்கா அணியை அசால்டாக வீழ்த்திவிடலாம் என்ற அதீத நம்பிக்கையுடன் இந்திய அணி இந்த தொடரில் விளையாடியதே அவர்களின் தோல்விக்கான காரணமாக நான் பார்க்கிறேன் என கூறியுள்ளார்.