இம்ரான் கான் தலைமுடியை கூட யாராலும்..? சகோதரி எச்சரிக்கை!
இம்ரான் கான் சகோதரரி அலீமா ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இம்ரான் கான்
பாகிஸ்தான் முன்னள் பிரதமரும், தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் நிறுவனருமான கிரிக்கெட் ஜாம்பவான் இம்ரான் கான் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இம்ரான் கானை பாகிஸ்தான் ராணுவம் சிறையில் வைத்து கொலை செய்துவிட்டதாக தகவல் வெளியாகி சர்ச்சையாக வெடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து , இம்ரான் கான் நலமுடன் இருக்கிறார். வழக்கமான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவர் வேறு சிறைக்கு மாற்றப்படுவதாக வெளியான தகவல் உண்மை இல்லை என்று அடியாலா சிறைத்துறை விளக்கம் அளித்துள்ளது. தற்போது இம்ரான் கான் சகோதரி அலீமா அளித்துள்ள பேட்டி ஒன்றில், கடந்த 6 முதல் 7 மாதங்களாக ஏராளமான தொந்தரவுகளை கொடுத்து வருகிறார்கள்.
சில நேரம் இம்ரான் கானை சந்திக்க அனுமதிப்பார்கள். சில நேரம் எங்களில் ஒருவரை மட்டுமே அனுமதிப்பார்கள். சில நேரம் சிறையில் அதிக நேரம் காத்திருக்க வைப்பார்கள். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இம்ரான் கானை எங்களால் சந்திக்க முடிந்தது.
சகோதரி எச்சரிக்கை
அதற்கு இம்ரான் கான் ஒரு வழக்கை எதிர்கொண்டிருந்ததெ காரணமாகும். குடும்பத்தினர், ஊடகங்களுக்கு அனுமதியின்றி வெளிப்படையான விசாரணை நடக்கவில்லை என்றால், மீண்டும் இந்த வழக்கில் ஆஜராக மாட்டோம் என்று வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதியின் உத்தரவால், வழக்கை தொடர முடிவு செய்தோம். இப்படிதான் இம்ரான் கானை சந்திக்க முடிந்தது. இந்த வழக்குகள் ஏற்கனவே நிரபராதி என்று இம்ரான் கான் நிரூபித்தவைதான். 5,6 வாரங்களுக்கு முன்பாகவே விசாரணை முடிவடைந்துவிட்டது.
நவம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக கூறினார்கள். ஆனால் திடீரென டிசம்பர் 28ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானை நேரில் சந்திக்கும் வரை எங்களால் எதையும் சொல்ல முடியாது. ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
இம்ரான் கானின் தலைமுடியை கூட யாராலும் தொட முடியாது. அப்படி தொட்டால்.. அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என்பதை பாருங்கள் எனத் தெரிவித்துள்ளார்.