இதனால்தான் இம்ரான்கானை சுட்டேன் : கைதான நபர் கொடுத்த வாக்குமூலத்தால் பாகிஸ்தானில் பரபரப்பு
பாகிஸ்தானில் ஆளும் கட்சிக்கு எதிராக இம்ரான்கான் நடத்திய பேரணியில் துப்பாக்கிச்சூடு நடந்தது இதில் குண்டடிபட்டு உயிர் தப்பிய இம்ரான்கான் தன்னை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்ற நபர்கள் என பிரதமர் ஷெரீப் உள்பட 3 பேரின் பெயர்களை குறிப்பிட்டது பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
இம்ரான்கான் மீது தாக்குதல்
பாகிஸ்தானின் பிரதமராக இருந்த இம்ரான் கான் கடந்த ஏப்ரல் மாதம் பதவி விலகினார் அவரது தலைமையிலான கூட்டணியில் இருந்து முக்கிய கட்சியாக பிரிந்து எதிர்க்கட்சிகள் இணைந்ததால் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது .
ஆனால் நம்பிக்கை நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கும் முன்பே தனது பதவியை ராஜினாமா செய்தார் இம்ரான்கான் இதையடுத்து ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் தற்போதைய ஆட்சி நிலை சரியில்லை என்று இம்ரான்கான் தொடர்ந்து விமர்சனங்களையும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றார்.
துப்பாக்கி சூடு
அந்த வகையில் ஆளும் கட்சிக்கு எதிராக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணி நடத்துவதற்காக இம்ரான்கான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரன்வாலா பகுதிக்கு நேற்று சென்றார் .
அப்போது அங்கிருந்த ஒரு கண்டெய்னர் லாரி மீது ஏறி என்றார் அந்த சமயம் கூட்டத்தில் இருந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர் ஒருவர் கைத்துப்பாக்கியால் மற்றொருவர் இயந்திர துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
பிரதமர்தான் காரணம்
துப்பாக்கியால் சுட்ட நபர் யாரென்று சுட்டதால் கொண்டு இம்ரான் கானின் வலது காலில் பாதித்தது அவர் கீழே சாய்ந்தது அவரை தொண்டர்கள் சுற்றிவளைத்தனர் மர்மநபர்கள் அடுத்தடுத்து குண்டுகள் தொண்டர்கள் மீது பாய்ந்தன .
இதில் 14 பேர் காயம் அடைந்தனர் இதில் தொண்டர் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்தவர்களில் இம்ரான் கானின் நெருங்கிய நண்பரும் செனட் உறுப்பினரும் ஆவார். இந்த நிலையில்இந்த தாக்குதலுக்கு பின்னணியில் ஆளும் கட்சியினர் உள்ளனர்.

குறிப்பாக தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இருப்பதாக இம்ரான் கானின் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு
இந்நிலையில் தான் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இதுபற்றிய விபரங்களை தெரிவித்துள்ளார். பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட 3 பேர் தான் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பின்னணியில் உள்ளதாக அவர் பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
இது பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
மேலும் துப்பாக்கியால் சுட்ட நபர் இம்ரான்கான் பொது மக்களை தவறாக வழி நடத்தியதால் தான் துப்பாக்கியால் சுட்டதாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.