இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.250 நாமளும் பெட்ரோல் விலைய ஏற்றிதான் ஆகணும் : இம்ரான் கான் கருத்தால் சர்ச்சை
பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பில் இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.250 ஆக விற்கப்படுகிறது பொருளாதார நிலையினை அதிகரிக்க நாமும் விலையேற்ற வேண்டிய நிலை வரலாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் 2021-23ஆம் ஆண்டுகளில் 51.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி இருந்தால்தான் பாகிஸ்தான் கடன்களிலிருந்து மீள முடியும் என்ற நிலையில் உள்ளது.
இந்தநிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் மக்களுக்கு செய்தி விடுத்துள்ளார். அதில், “பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்துத்தான் ஆக வேண்டும்.

வங்கதேசத்தில் ரூ.200க்கு பெட்ரோல் விற்கப்படுகிறது. ஆனால், பாகிஸ்தானில் நாம் லிட்டர் பெட்ரோலை ரூ.138க்குதான் நிர்ணயித்துள்ளோம்.
பாகிஸ்தானில் பெட்ரோல் விலையை அதிகரிக்காவிட்டால், நம் நாடு கடனில் மூழ்கிவிடும்.” என்று இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் விலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் அரசை குறை கூறி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய மதிப்பில் ஒரு ரூபாய் என்பது பாகிஸ்தான் மதிப்பில் ரூ 2.29 ஆகும். எனவேதான் லிட்டர் பெட்ரோல் ரூ.250 என்றும் இம்ரான் கான்பேசியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரன் கான் கருத்திற்கு அந்நாட்டில் உள்ள பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.