இந்திய அமைச்சரை பாராட்டிய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்
அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி, இந்தியா, ரஷ்யாவுடன் இருந்து எண்ணெய் வாங்குவது குறித்தும் பெருமையாக பேசி, மத்திய வெளியுறவு துறை ஜெய்சங்கர் பற்றி பெருமையாக பேசினார் .
இம்ரான் கான்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். பேசியது என்னவென்றால், இந்தியா குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குகிறது. இது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிர்ப்பாக இருந்தாலும், அவர்கள் எதிர்ப்பை தெரிவித்த நிலையிலும், நாங்கள் எங்கு வாங்கினால் என்ன என்பது போல கருத்து தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சரையும் குறிப்பிட்டு பாராட்டினார்.

இந்தியா பாகிஸ்தான்
இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நேரத்தில் சுதந்திரம் பெற்றவை. பிறகு ஏன் இந்தியா செயல்படுத்தும் வெளிநாட்டு கொள்கைகளை பாகிஸ்தான் செய்ய மறுப்பது ஏன் என்ற தற்போதைய பாகிஸ்தான் அரசாங்கத்தை குற்றம் சாட்டினார்.
மேலும், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் எண்ணெய் வாங்கியது குறித்து பேசிய வீடியோவையும், அதனை ரஷ்யாவிடம் வாங்குவது குறித்தும் பேசிய வீடியோவையும் அந்த கூட்டத்தில் போட்டு காட்டினார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்.