என்னை சுட்ட அதே இடத்திலிருந்து மீண்டும் பேரணியை தொடருவேன் : இம்ரான்கான்

Pakistan Imran Khan Passport
By Irumporai Nov 07, 2022 02:11 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

தான் சுடப்பட்ட அதே இடத்திலிருந்து செவ்வாய்க்கிழமை மீண்டும் பேரணி தொடரும் என பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இம்ரான்கான் துப்பாக்கி சூடு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது கடந்த வியாழக்கிழமை அடையாளம் தெரியாத நபர் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

என்னை சுட்ட அதே இடத்திலிருந்து மீண்டும் பேரணியை தொடருவேன் : இம்ரான்கான் | Imran Khan Says Long March To Resume On Tuesday

இதில் அவரது கால் பகுதி காயமடைந்தது நிலையில் லாகூரில் அவருக்கு சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையிலிருந்து நேற்று வீடு திரும்பினார். 

 துப்பாக்கி சூடு

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இம்ரான் கான்நான் சுடப்பட்ட அதே இடத்திலிருந்து செவ்வாய்க்கிழமை மீண்டும் பேரணி தொடரும். நான் இங்கிருந்து (லாகூரில்) கொண்டே பேரணியில் உரையாற்றுவேன்.

எங்கள் பேரணி ராவல்பிண்டியை அடைந்தவுடன், நான் அதில் நேரில் கலந்துகொண்டு பேரணியை மீண்டும் தலைமையேற்று வழிநடத்துவேன். எங்கள் பேரணி, அடுத்த 10 முதல் 14 நாட்களுக்குள் ராவல்பிண்டியை வந்தடையும் என தெரிவித்தார்.