பாகிஸ்தானை விட இந்தியா சிறந்தது - திடீரென பல்டி அடிக்கும் பிரதமர் இம்ரான் கான்
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அதன் மக்களுக்கானது என பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே அந்நாட்டின் பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. கடுமையான கடன் சுமையால் சிக்கல் ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலை சந்தித்து வருகிறது. இதையடுத்து, அந்நாட்டு ராணுவத்துக்கும் ஒதுக்கீடு குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன. வரும், 28 ஆம் தேதி இந்த திருமணம் வாக்கெடுப்பு நடக்கிறது. இதில் இம்ரான் கான் அரசுக்கு போதிய பெரும்பான்மை பலம் இருப்பதாக காட்டினால் அந்த அரசு வெற்றி பெறும் என கருதப்பட்டது.
ஏற்கனவே இம்ரான் கான் தற்போது சொந்த கட்சி எம்பிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மார்ச் 22-23 தேதிகளில் நடைபெறும் ஓஐசி-எப்எம் மாநாட்டிற்குப் பிறகு ராணுவத் தளபதி கமர் ஜாவேத் பஜ்வா உள்ளிட்ட நான்கு மூத்த பாகிஸ்தான் ராணுவ ஜெனரல்கள் பாகிஸ்தான் பிரதமரை ராஜினாமா செய்யுமாறு கூறியதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.