இம்ரான் கான் கொல்லப்படலாம் : அமெரிக்க முன்னாள் அதிகாரி கருத்து

Imran Khan
By Irumporai May 11, 2023 09:05 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

இம்ரான் கான் காவலில் இருக்கும்போது கொல்லப்பட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிகாரி  பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

இம்ரான்கான் 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை, ஊழல் குற்றசாட்டுகள் தொடர்பாக அண்மையில் சிறப்பு பாதுகாப்பு படையினர் மூலம் இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்திலேயே அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

 அமெரிக்கா எச்சரிக்கை

தற்போது அவர் விசாரணைக்காக நீதிமன்ற காவலில் இருக்கிறார். அவரது ஆதரவாளர்கள் பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் பொது சொத்துக்களை சேதப்படுத்தி வருகின்றனர். இதனால், பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இம்ரான் கான் கொல்லப்படலாம் : அமெரிக்க முன்னாள் அதிகாரி கருத்து | Imran Khan May Be Killed While In Us Ambassador

இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க முன்னாள் தூதர் சல்மே கலீல்சாத், இம்ரான் கானை காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், இம்ரான் கான் காவலில் இருக்கும்போது கொல்லப்பட வாய்ப்பு இருப்பதற்கான அச்சம் அதிகரித்து வருகிறது. என்றும், இன்று நீதிமன்றத்தில் நீதிபதி முன்பும் இம்ரான் கான் இந்த செய்தியையே வெளிப்படுத்தினார் எனவும் கலீல்சாட் தெரிவித்துள்ளார்.