பாகிஸ்தானில் கவிழ்ந்தது இம்ரான் கான் அரசு ; புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க நாளை கூடுகிறது நாடாளுமன்றம்!

notrustmotion imrankhanregimefalls shahbazsharif pakistanpolitics
By Swetha Subash Apr 10, 2022 07:06 AM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

பாகிஸ்தானில் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் வெற்றி பெற்றதை தொடர்ந்து புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் பதவியேற்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் சனிக்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்டது. அவருக்கு எதிரான இந்த வாக்கெடுப்பு வெற்றி பெற்றதையடுத்து, அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சித் தலைவரும் எதிா்க்கட்சித் தலைவருமான ஷாபாஸ் ஷெரீஃப் பதவியேற்பாா் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.

பிரதமா் இம்ரான் கான் தலைமையில் நேற்று இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமா் பதவியை இம்ரான் கான் ராஜினாமா செய்ய மாட்டாா் என முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.

இதையடுத்து, நள்ளிரவு 12 மணிக்கு மேல் மீண்டும் கூடிய அவையில், அவைத் தலைவா் ஆசாத் கைஸரும், துணைத் தலைவா் காசிம் சுரியும் ராஜினாமா செய்வதாக அறிவித்தனா்.

பாகிஸ்தானில் கவிழ்ந்தது இம்ரான் கான் அரசு ; புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! | Imran Khan Loses Trust Vote In Pakistan Assembly

இதையடுத்து, வாக்கெடுப்பு நடவடிக்கைகளை எதிா்க்கட்சியை சோ்ந்த அயாஷ் சாதிக் அவைக்கு தலைமை வகித்து தொடங்கினாா்.

342 உறுப்பினா்கள் கொண்ட நாடாளுமன்ற கீழவையில் தீா்மானம் வெற்றி பெற 172 வாக்குகள் தேவை. இந்நிலையில், தீா்மானத்துக்கு ஆதரவாக 174 போ் வாக்களித்ததாக அறிவித்ததையடுத்து, இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

இதையடுத்து, புதிய பிரதமராக எதிா்க்கட்சித் தலைவா் ஷாபாஸ் ஷெரீஃப் நியமிக்கப்படுவாா் என தகவல்கள் வெளியாகியுள்ளன.