கடனில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் - வெளியான அதிர்ச்சி தகவல்

Pakistan Loan Imran Khan
By Thahir Oct 13, 2021 10:47 AM GMT
Report

வெளிநாட்டு வங்கிகளில் அதிகம் கடன் வாங்கிய 10 நாடுகளின் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் இடம்பெற்றுள்ள நிலையில், கடனை தற்காலிகமாக ரத்து செய்யும் நடைமுறைக்கு அது தகுதி பெற்றுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

கொரோனா  காரணமாக ஏழை மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட கடன் குறிப்பிட்ட காலம் வரை ரத்து செய்யப்பட்டுவருகிறது.

கடனில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் - வெளியான அதிர்ச்சி தகவல் | Imran Khan Loan Pakistan

இந்த தற்காலிக கடன் ரத்து நடைமுறைக்கு தான் பாகிஸ்தான் தற்போது தகுதி பெற்றுள்ளது. 2022 ஆண்டுக்கான சர்வதேச கடன் புள்ளியியலை உலக வங்கி திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வெளிநாட்டு வங்கிகளில் இந்த கடன் ரத்து நடைமுறைக்கு தகுதிபெற்ற நாடுகள் வாங்கிய கடன் விகிதங்களில் பெரிய வேறுபாடு இருப்பது தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு வங்கிகளில் அதிகம் கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் அங்கோலா, வங்கதேசம், எத்தியோப்பியா, கானா, கென்யா, மங்கோலியா, நைஜீரியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சாம்பியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நாடுகள் அனைத்தும் தற்காலிக கடன் ரத்து நடைமுறைக்கு தகுதி பெற்றுள்ளன. 2020ஆம் ஆண்டின் இறுதி வரை, தற்காலிக கடன் ரத்து நடைமுறைக்கு தகுதிபெற்ற நாடுகள் வாங்கிய மொத்த கடன் இருப்பு 509 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

2019 ஆண்டை ஒப்பிடுகையில், இது 12 சதிவிகிதம் அதிகமாகும். கடன் ரத்து நடைமுறைக்கு தகுதி பெற்ற மொத்த நாடுகள் வாங்கிய கடனில் 59 சதவிகிதம் கடனை இந்த முதல் 10 நாடுகளே நாடுகள் பெற்றுள்ளன.

அதேபோல், உத்தரவாதம் இல்லாமல் கடன் அளிக்கப்பட்ட நாடுகளின் 65 சதிவிகிதம் கடனை இந்த 10 நாடுகளே பெற்றுள்ளன. ஆனால், நாடுகள் வாங்கிய கடனின் விகிதம் ஒன்றுக்கு ஒன்று பெரிய அளவில் மாறுபடுகிறது.

பாகிஸ்தானை பொறுத்தவரை, வெளிநாட்டு வங்கிகளில் அதன் கடன் 8 சதவிகிதம் உயர்ந்திருப்பது இருதரப்பு மற்றும் பல தரப்பு வங்கிகள் அதற்கு நிதி அளித்திருப்பதும் வணிக வங்கிகள் புதிதாக கடன் அளித்திருப்பதையும் பிரதிபலக்கிறது.

2020ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு தனியார் நிறுவனங்கள் 15 சதவகிதம் அதிக நிகர வரவுகளை வழங்கியுள்ளது. அதாவது, 14 பில்லியன் அமெரிக்க டாலர்களை அளித்துள்ளது.

அதேபோல், புதிய கடனை திருப்பி அளிப்பதற்கான கால அளவை நீட்டித்துள்ளது. பாகிஸ்தானுக்கான அந்நிய நேரடி முதலீடு 1.9 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது.

இது, 2019 ஆம் ஆண்டை விட 5 சதவிகிதம் குறைவாகும். மின் உற்பத்தி மற்றும் தொலைத்தொடர்பு துறையில் பிரிட்டன் மற்றும் சீன முதலீட்டாளர்கள் முதலீடு செய்வது குறைந்துள்ளது. தெற்காசியாவில், சீனாவுக்கான கடன் 2011 ல் 4.7 பில்லியன் டாலராக இருந்து 2020 ல் 36.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.