அதாவது ..1 பில்லியனா? 1 கோடியா? தவறாக பேசிவிட்டு வாங்கி கட்டிக்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர்!

Imran Khan
By Irumporai Aug 04, 2021 01:08 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

இந்திய மக்கள் தொகை குறித்து தவறாக கூறிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இணைய வாசிகள் கிண்டல்செய்துவருகின்றனர் பொதுவாக அரசியல் பிரமுகர்கள் ஏதாவது தவறாக பேசிவிட்டால் இணையவாசிகள் அதனை கலாய்த்து தள்ளவிடுவார்கள்.

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தவறான தகவலை கூறியதால் இணையவாசிகள் கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர். பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கானிடம் உங்களின் நாட்டில் விளையாட்டின் நிலை மோசமாக உள்ளதே என கேட்கப்பட்டதற்கு, 40லிருந்து 50 லட்சம் வரை மக்கள் தொகை கொண்டுள்ள நியூசிலாந்து, 1 பில்லியன் 300 கோடியே மக்கள் தொகை கொண்டுள்ள இந்திய அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தோற்கடித்ததுஎன பதில் கூறினார்.

  இம்ரான் கானின் விடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. தவறான தகவல் கூறிய  இம்ரான் கானுக்கு பதில் அளித்த ட்விட்டர் பயனாளர் ஒருவர்.

இந்தியாவின் மக்கள் தொகை குறித்து பேசுவதற்கு முன்பு சரியான தகவலை கூறுகிறோமா என இம்ரான் கான் சரி பார்த்து கொள்ள வேண்டும். அவரிடம்  இந்தியாவுக்கு எதிரான வெறுப்புதான் உள்ளது ஒரு  பெரிய மனிதராக நடந்து ரைவில் வளர வேண்டும் என புத்திமதி கூறியுள்ளார்.