இன்றைய தலைப்புச் செய்திகள் -15-03-2025
புதிய நகரம், புதிய விமான நிலையம், புதிய நீர்த்தேக்கம், அதிவேக ரயில் சேவை; தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கைக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் வரவேற்பு.
தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்; காலை 9.30 மணிக்கு உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகளை வெளியானது; நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு.
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு; 18-ம் படி ஏறியவுடன் ஐயப்பனை நேரடியாக தரிசனம் செய்ய முடிவதால் பக்தர்கள் மகிழ்ச்சி.
சுனிதா வில்லியம்சை பூமிக்கு அழைத்துவர வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஃபால்கான் 9 ராக்கெட்; புளோரிடாவில் இருந்து புறப்பட்ட க்ரூ டிராகன் விண்கலத்தில் 4 பேர் பயணம்.