இன்றைய முக்கிய செய்திகள் - 13.03.2025
Tamil nadu
India
World
By Sumathi
இன்றைய (13/03/2025) முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
- பள்ளி மாணவர்கள் ‘போஸ்ட்மெட்ரிக்' கல்வி உதவித் தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
- சென்னையில் மாதம் ரூ.2,000 பஸ் பாஸ் முறையில் ஏசி பஸ்கள் உள்ளிட்ட அனைத்து மாநகர பேருந்துகளிலும் பயணம் மேற்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்ய போக்குவரத்துத்துறை அமல்படுத்தப்படவுள்ளது.
- நாளை தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக பட்ஜெட்டை சென்னையில் 100 இடங்களில் பொதுமக்கள் நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் பாலமுருகன், அவரது மனைவி வழக்கறிஞர் சுமதி, இரு மகன்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
- சுனிதாவை அழைத்து வரும் க்ரூ-10 மிஷன் ஒத்திவைக்கப்பட்டதற்கு ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,960க்கும் ஒரு கிராம் ரூ.8,120க்கும் விற்பனையாகிறது.
- இந்தி பேசக்கூடியவர்களே தமிழ்நாட்டிற்கு தான் வேலை தேடி வருகிறார்கள் - திருமாவளவன் தாக்கு மும்மொழி கொள்கை.
- மகாராஷ்டிராவில் மராத்திக்குத் தான் முக்கியத்துவம் - பாஜக உறுதி